பொகவந்தலாவை , திரேசியா தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய ஏற்பாடுகளை செய்துகொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் பணிப்புரைக்கமைய, இதொகாவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரனின் ஆலோசனையின் பிரகாரம், இதொகாவின் பிரதி தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கணபதி கணகராஜ் சம்பவ இடத்துக்கு சென்றார்.

அமைச்சரின் விசேட பிரதிநிதியாக சென்ற அவர், பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கான தேவைகளையும், குறைகளையும் கேட்டறிந்தார்.
கிராம சேவகர் உட்பட அரச நிர்வாக தரப்புகளுடனும், தோட்ட நிர்வாகத்துடனும் பேச்சு நடத்தினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள், பாதுகாப்பான இடங்களில் தற்காலிக தங்குமிட ஏற்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார்.
