ஜே.வி.பி. வங்குரோத்து அடைந்த கட்சியாம் – மஹிந்தானந்த அளுத்கமகே

இம்முறை வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படலாம் என பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

பொது ஜன பெரமுன கட்சி அமைப்பாளர்களின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

எதிர்வரும் நவம்பர் மாதம் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படலாம்.

இலங்கை பெற்றுக் கொண்டுள்ள கடன் தொடர்பில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளன. அந்த வகையில் வெகு விரைவில் சர்வதேச நாணய நிதியத்துடன் நிதி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தை அரசாங்கம் மேற்கொள்ள முடியும்.

அவ்வாறு சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட நிதி நாட்டுக்கு கிடைத்ததும் நாட்டில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

தேர்தல் சம்பந்தமாக பல்வேறு தரப்பிலும் பல தரப்பட்ட கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் இரண்டு வருடங்களுக்கு நாட்டில் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்றே கூற வேண்டும்.

மக்கள் விடுதலை முன்னணி மக்கள் மத்தியில் பல்வேறு பிரசாரங்களை முன்னெடுத்து வந்தாலும் அந்தக் கட்சி வங்குரோத்து அடைந்துள்ள கட்சி என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles