நாடாளுமன்றம் இன்று கூடுகிறது – தெரிவுக்குழு அமைப்பதற்கான யோசனை முன்வைப்பு

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ‘சனல் 4’ காணொளில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதற்கான யோசனை இதன்போது முன்வைக்கப்படவுள்ளது.

சபை முதல்வரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்தவால், தெரிவுக்குழு அமைப்பதற்கான யோசனை முன்வைக்கப்படவுள்ளது.

சனல் – 4 குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவொன்றும் விசாரணை முன்னெடுத்துவருகின்றது, அதேபோல நாடாளுமன்ற தெரிவுக்குழுவும் அமைக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

அதற்கமையவே இந்த நகர்வு முன்னெடுக்கப்பட்டுவருகின்றது .

Related Articles

Latest Articles