நாட்டில் மேலும் 137 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 38 பேருக்கும்,பேலியகொடை மீன் சந்தை மற்றும் மீன்பிடித் துறைமுக தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 99 பேருக்கும் இவ்வாறு வைரஸ் பரவியுள்ளது.
இதன்படி, இலங்கையில் 2ஆவது அலை ஊடாக பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, இலங்கையில் கடந்த ஜனவரி முதல் இன்றுவரை 10 ஆயிரத்து 561 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 4 ஆயிரத்து 399 பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 142 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.