ஊரடங்குக்கு முன்னர் கடந்த 29 ஆம் திகதி மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய 554 பேர் அவர்கள் தற்போது தங்கியுள்ள இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதிப்பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
” மேல்மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மேல் மாகாணத்தில் இருந்து வெளியிடங்களுக்கு செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.
எனினும், அந்த உத்தரவைமீறி சிலர் சென்றுள்ளனர். அவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டுவருகின்றனர். இன்றுகாலைவரை 554 பேர் அவர்கள் இருக்கும் இடங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சிலர் பொலிஸாரிடம் சிக்காமல் இருக்கலாம். மேல்மாகாணத்துக்கு நாளை வரும்போது அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றும் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.