எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

அடுத்த வருடம் முதல் நாளாந்தம் எரிபொருள் விலையை திருத்தம் செய்வதற்கான முறைமை ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அனைத்து எரிபொருள் விநியோக நிறுவனங்களுடனும் கலந்துரையாடியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய, தற்போது மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்த முறைமை கைவிடப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles