கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இருந்து சுகாதார அமைச்சு பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார்.
கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு சுற்றாடல் அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், விவசாய அமைச்சராக செயற்பட்ட மஹிந்த அமரவீரவுக்கு, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சும் கையளிக்கப்பட்டுள்ளது.
ரமேஷ் பத்திரண கைத்தொழில் அமைச்சு பதவியையும் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் புதிய அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.










