ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் செலுத்தும் கட்டுப்பண தொகையை ரூ. 26 லட்சம்வரை அதிகரிக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தற்போது கட்டுப்பணமாக 50 ஆயிரம் ரூபா செலுத்தும் நிலையில் அந்த தொகையை 26 லட்சம் ரூபாவாக அதிகரிக்குமாறும்,
சுயேட்சைகுழு வேட்பாளர் ஒருவர் கட்டுப்பணமாக 75 ஆயிரம் ரூபா செலுத்தும் நிலையில் அந்த தொகையை 31 லட்சம் ரூபாவாக அதிகரிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு லட்சம் ரூபா திருப்பி செலுத்த முடியாத வைப்பு தொகையாகவும், எஞ்சிய தொகை மீள செலுத்தக்கூடிய வைப்பு தொகையாகவும் அமைய வேண்டும் எனவும் முன்மொழியப்பட்டுள்ளது.
அதேவேளை, நாடாளுமன்ற, மாகாண மற்றும் உள்ளாட்சிசபைத் தேர்தல்களுக்கான கட்டுப்பண தொகையை அதிகரிப்பதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.










