ஜீவனின் ஏற்பாட்டில் நாம்200 நிகழ்வு இன்று! ஜனாதிபதி, இந்திய நிதி அமைச்சர் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்பு!!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில், மலையக மக்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘நாம் 200’ நிகழ்வு இன்று மாலை 4 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஆரம்பமாகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகள், தமிழக அரசியல் பிரமுகர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் என பலரும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர். இந்திய நிதி அமைச்சர் பிரதம அதிதியாக பங்கேற்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் ஜீவன் தொண்டமான் வரவேற்புரையை நிகழ்த்தவுள்ளார் . மலையக கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. நாம்200 ஐ முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கு பெரும் பலமாகவுள்ள மலையக மக்களின் 200 வருட கால வரலாற்றையும், நாட்டுக்காக அம்மக்கள் செய்த தியாகங்களையும் நினைவு கூரும் வகையிலேயே, அரச அங்கீகாரத்துடன் இந்நிகழ்வு இடம்பெறுகின்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles