லாப்ஸ் (Laugfs Gas) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிகரிக்காமல் அதே விலையில் பேண தீர்மானித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது எரிவாயு விலை அதிகரிக்கப்பட வேண்டியிருந்தாலும், தற்போதைய விலைக்கே சமையல் எரிவாயுவை விற்பனை செய்ய லாப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் நிறைவேற்று குழு அதிகாரி கலாநிதி நிரோஷன் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
லாப்ஸ் கேஸ் (Laugfs Fas) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இறுதியாக கடந்த ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்டிருந்தது.
