மின் கட்டணத்தை உடன் குறைக்குமாறு ராதாகிருஷ்ணன் வலியுறுத்து

மின் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன், அது உடன் குறைக்கப்பட வேண்டும் எனவும் வலியுத்தினார்.

மலையக மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு அக்கரப்பத்தனை ஸ்ரீ லக் ஷ்மி மஹால் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தலைமைதாங்கி உரையாற்றுகையிலேயே இராதாகிருஷ்ணன் இவ்வாறு வலியுறுத்தினார்.

அத்துடன், மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், நாட்டின் தற்போதைய நிலைமை, அரசாங்கத்தால் மக்கள் சந்திக்கும் இன்னல்கள், விலைவாசி உயர்வு, தோட்ட நிர்வாகத்தின் அராஜகங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பிலும் இதன்போது கருத்துகளை முன்வைக்கப்பட்டன.

மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் விஜயசந்திரன்,பிரதி தலைவர் ராஜாராம், மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன், நிதிச்செயலாளர் தாளமுத்து சுதாகரன் உட்பட கட்சி முக்கியஸ்தர்களும், மக்கள் சந்திப்பில் பங்கேற்றனர்.

நிருபர் – நீலமேகம்பிரசாந்த்

Related Articles

Latest Articles