போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வரும் நிலையில், காசாவில் தரை, கடல், வான் என 3 வழிகளிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த மாதம் 7 ஆம் திகி இஸ்ரேலுக்குள் ஊடுருவி பயங்கர தாக்குதலை நடத்தி, 1,400 பேரை கொன்று , வெளிநாட்டினர் உள்பட சுமார் 250 பேரை பிணை கைதிகளாக பிடித்து சென்றனர்.
இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இருதரப்புக்கும் இடையில் ஏற்பட்ட முந்தைய போர்களை விடவும் மிகவும் மோசமானதாக மாறிவரும் இந்த போர் இன்று 32-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் இருதரப்பிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிகை நேற்று 10 ஆயிரத்தை கடந்தது.
இந்நிலையில் காசாவில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலான பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஆவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
