தந்தையை கொலை செய்த மகன்! இரத்தினபுரியில் பயங்கரம்!!

இரத்தினபுரியில் தந்தையை அவரது மகன் அடித்துக் கொலை செய்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடும்பத்தில் பணம் தொடர்பான வாக்குவாதத்தில் தாக்கப்பட்ட 72 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை, இரத்தினபுரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரி, ஓபநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த அமரசிங்க என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 12ஆம் திகதி மதியம் வீட்டில் தாய், தந்தை மற்றும் மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது மகன் கோடரிப் கைப்பிடியால் தந்தையைப் பலமுறை தாக்கினார்.

சம்பவத்தில் காயமடைந்த தந்தை 1990 அம்புலன்ஸ் சேவை ஊடாக இரத்தினபுரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் உயிரிழந்தார் என்று ஓபநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் மகன் கைது செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles