ஊவாவில் தமிழ் மொழி அமுலாக்கத்துக்கு தடையாக உள்ள ‘ஆளுநர்’ – வடிவேல் சுரேஷ் சீற்றம்

” ஊவா மாகாணத்தில் தமிழ் மொழி அமுலாக்கம் அங்கு நியமிக்கப்படுகின்ற ஆளுநர்களின் நடத்தை காரணமாக இல்லாமலாக்கப்பட்டு வருகின்றது. மலையகம் தொடர்பான போதுமான அறிவு இன்மையே இதற்கு காரணமாகும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவி்த்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையகத்தில் சில பாடசாலைகளுக்கு இலவசக் கல்வியை பெற்றுக்கொள்வது தடையாக இருந்து வருகிறது. பதுளை மாவட்டத்தில் ராேபரி கிராமத்தில் இருக்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி இல்லை. அவர்கள் அதிகாலை 4 மணிக்கு பந்தங்களை ஏந்திக்கொண்டு 15 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் மடுல்சீமை பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டிய துர்ப்பாகிய நிலை இருந்து வருகிறது.

எனினும், மாணவர்களின் கல்வி பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரண தர பெறுபெறுகள் சிறப்பாக உள்ளன.

மலையகத்தில் பாடசாலைகளில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளபோதும் அந்த பாடசாலைகளுக்கு தேவையான ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளப்படவில்லை.

பதுளை மாவட்டத்தில் பசறை தொகுதியில் தமிழ் மொழி மூல மூன்று தேசிய பாடசாலைகளே இருக்கின்றன. இவைகளில் வளங்கள் இருந்தாலும் போதிய ஆசியர்கள் இல்லை. குறிப்பாக கல்வி பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரண தர பாடங்களுக்கு கணிதம்,விஞ்ஞானம் பாடங்களுக்கு ஆசிரியர் இல்லை.

அதனால் மலைய பாடசாலைகளுக்கும் கல்வி பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரண தர பாடங்களுக்கு தேவையான ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் ஊவா மாகாணத்தில் தமிழ் மொழி அமுலாக்கம் ஏற்கனவே இருந்து வந்தது. ஆனால் மாறி மாறி வந்த ஆளுநர்கள், மலையகத்தின் கல்வி. சுகாதாரம் என அனைத்தையும் மட்டம் தட்டி இருக்கிறார்கள்.

நியமிக்கப்படும் ஆளுநர்கள் வெளிப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள். அதனால் அவர்களுக்கு மலையகம் தொடர்பாக போதுமான அறிவு இல்லை.

ஊவா மாகாணத்தில் 202 தமிழ் முஸ்லிம் பாடசாலைகள் இருக்கின்றன. இந்த பாடசாலைகளில் தமிழ் மொழி அமுலாக்கம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஊவா மாகாணத்தில் தமிழ் மொழி அமுலாக்கம் அங்கு நியமிக்கப்படுகின்ற ஆளுநர்களின் நடத்தை காரணமாக இல்லாமலாக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles