” அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயம் களமிறக்கும். அவரை பின்வாங்க வைக்க இடமளிக்கமாட்டோம்.” – என்று அக்கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசுமாரசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நெருக்கடி நிலையில் இருந்து நாட்டை மீட்கக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. சர்வதேச ஆதரவை பெற்ற நபரும் அவர்தான். நெருக்கடி நிலைமையைக் கையாளும் அனுபவம் அவருக்கே உள்ளது. மக்களின் மனசாட்சிக்கு இது தெரியும். எனவே, போலிகளை நம்ப வேண்டாம்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதற்கான அழுத்தங்களை நாம் தொடர்ச்சியாக விடுப்போம். அவர் கட்டாயம் களமிறங்க வேண்டும்.” – என்றார்.
