தலவாக்கலையில் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று

தலவாக்கலை, மிடில்டன் பகுதியில் பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். 32 வயதுடைய பெண்ணொருவருக்கெ இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

கொழும்பு, வத்தளை பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த குறித்த பெண் கடந்த 16 ஆம் திகதி ஊருக்கு வந்துள்ளார். கொழும்பில் இருந்து டயகம நோக்கி பயணித்த இ.போ.ச. பஸ்ஸிலேயே இவர் வந்துள்ளார்.

இவருடன் வந்து மறுபடியும் கொழும்பு சென்ற உறவினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இவர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டார். கடந்த 4 ஆம் திகதி இவர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதன் முடிவு
வெளியான நிலையில் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு முன்னர் குறித்த பெண் தலவாக்கலையிலுள்ள வங்கியொன்றுக்கும், வர்த்தக நிலையங்கள் சிலவற்றுக்கும் சென்றுவந்துள்ளார்.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles