ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரிகமப’ இசை நிகழ்ச்சியில் வெற்றிமகுடம் சூடிய இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இசைக்குயில் கில்மிஷா, தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளை சந்தித்துள்ளார்.
சென்னை, காவாங்கரை பகுதியிலுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு சென்ற கில்மிஷா, அங்குள்ள இலங்கை தமிழ் அகதிகளுடன் கலந்துரையாடினார்.
இதன்போது கில்மிஷாவுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
அதேவேளை, கில்மிஷா நாளை நாடு திரும்புகின்றார். யாழ். பலாலி விமான நிலையம் வரும் அவருக்கு அமோ வரவேற்பளிக்கப்படவுள்ளது.