அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கொழும்பில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு முன்பாக இன்று காலை மலர்வளையம் வைக்கப்பட்டுள்ளது.
சிவில் செயற்பாட்டாளர்கள் மூவரே, புத்தாண்டு தினமான இன்று, அமைச்சர் கெஹலியவுக்கான பரிசு இது எனக் குறிப்பிட்டு மலர்வளையத்தை கொண்டு வந்துள்ளனர்.
கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக பதவி வகித்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறுப்படும் மோசடிகள், மருந்து கொள்வனவு மோசடிகள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
வீட்டுக்கு முன்னால் வந்த செயற்பாட்டாளர்கள் மூவர், மலர்வளையத்தை கொடுக்க முற்பட்டனர். எவரும் வாங்கவில்லை. அவ்விடத்துக்கு பொலிஸாரும் வந்தனர். இறுதியில் கடிதமொன்றை கையளித்தவிட்டு, மலர்வளையத்தை வீட்டுக்கு முன்பாக வைத்துவிட்டு புறப்பட்டனர்.