15 ஆயிரம் சமுர்த்தி பயனாளிகளின் நலன் கருதி மன்ராசி நகரில் , சமுர்த்தி வங்கி கிளையொன்று, லிந்துலை – அக்கரபத்தனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் ரி.தரணி மகேந்திரன் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
டயகம, அக்கரபத்தனை பிரதேசங்களை உள்ளடக்கிய 57 பிரிவுகளைச் சேர்ந்த தோட்ட மக்களும், 09 கொலனிகளைச் சேர்ந்த சுமார் 09 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 15 ஆயிரத்து 572 பேர் கடந்த காலங்களில் சமுர்த்தி சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு லிந்துலை நகருக்கே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் முதியவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
இந்நிலையிலேயே பயனாளிகள் நலன் கருதி மன்ராசி நகரில் சமுர்த்தி வங்கி கிளையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான இடத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைர் சச்சிதானந்தன் பெற்றுக்கொடுத்ததாகவும், இனிவரும் காலங்களில் உணவு முத்திரை கொடுப்பனவை தவிர சமுர்த்தி வங்கியுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களும் குறித்த வங்கியில் முன்னெடுக்கப்படும் என அக்கரபத்தனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் ரி.தரணி மகேந்திரன் தெரிவித்தார்.
திறப்பு விழாவில் சமுர்த்தி வங்கி அதிகாரிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைர் சச்சிதானந்தன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
மலைவாஞ்ஞன்