மக்கள் செலவு செய்தால் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயார்!

” தேர்தல் செலவை மக்கள் பொறுப்பேற்றால் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே இருக்கின்றேன்.” – நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு எனக்கும் தகுதி உள்ளது. ஆனால் அத்தேர்தலை எதிர்கொள்ள பண பலம் அவசியம். என்னிடம் தற்போது பணம் இல்லை. அறகலய காலத்தில் தாக்கப்பட்டேன். மருத்துவத்துக்கு மட்டும் 2 கோடி ரூபாவரை செலவளித்துள்ளேன்.

முன்னர் மக்கள்தான் மேடை அமைப்பார்கள், போஸ்டர் ஒட்டுவார்கள். அந்த கலாசாரம் தற்போது மாறியுள்ளது. எனவே, மக்கள் தேர்தல் செலவை பொறுப்பேற்றால் களமிறங்க நான் தயார்.

தேர்தலில் எந்த பக்கம் நிற்க வேண்டும் என்பதில் அவசரப்படக்கூடாது. ஹெலிகொப்டர் கூட்டணிக்கு தற்போது என்ன நடந்துள்ளது? எனவே, உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles