தலைமன்னார் பகுதியில் 526 போதைவில்லைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமன்னார் – அம்பாள்நகர் பகுதியில் நேற்றிரவு(06) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் வீடொன்று சோதனையிடப்பட்டுள்ளது.
இதன்போது வீட்டின் பின்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 526 போதைவில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஒருவர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
