கறுப்பு ஆடையில் களமிறங்கிய சஜித் அணி? காரணம் என்ன?

வற் வரி அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிரப்பு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு ஆடை அணிந்து இன்று(09) பாராளுமன்ற அமர்வில் பங்கேற்றிருந்தனர்.

2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று ஆரம்பமானது.

இதன்போதே ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கறுப்பு ஆடை அணிந்து சபைக்கு வந்திருந்தனர்.

அரசின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்ததுடன், தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்தினர்.

Related Articles

Latest Articles