பொலன்னறுவை ஹிகுரக்கொட, 70 ஏக்கர் பகுதியில் வீடொன்றின் சுவர இடிந்து விழுந்ததில் 23 வயதுடைய இளம் தாயொருவர் பலியாகியுள்ளார்.
அத்துடன், குறித்த பெண்ணின் கணவர் மற்றும் ஒன்றரை வயதான மகள் ஆகியோர் காயம் அடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
மண் மற்றும் தகரங்களைக்கொண்டே குறித்த வீடு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தவேளையிலேயே சுவர் இடிந்து விழுந்துள்ளது.
