கொழும்பு, மட்டக்குளி ரந்திய உயன தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 40 வயதுடைய நபர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. எனினும், பாதாள குழுக்களுக்கிடையிலான மோதலால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இந்தியாவில் தலைமறைவாகி இருக்கும் பாதாள குழு உறுப்பினர் ஒருவருக்கு நெருக்கமானவர்மீதே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.










