யுக்திய ஒப்பரேஷனால் நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்கள் 17 வீதத்தால் குறைவடைந்துள்ளன – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் (நேற்று முன்தினம்) ஒரு மாதம் பூர்த்தியாகியுள்ளது. அந்தவகையில் கடந்த மாதம் நாட்டில் இடம்பெறும் அனைத்து குற்றச்செயல்களும் 17 வீதத்தால் குறைவடைந்துள்ளது.
யுக்திய நடவடிக்கை என்பது ஊடகக் கண்காட்சி நடவடிக்கை அல்ல. போதைப்பொருள் பணத்தில் வாழும் சிலரே அவ்வாறான கருத்துகளை பரப்புகின்றனர். யுக்திய நடவடிக்கை வெற்றியளித்துள்ளது. மக்கள் அதனை நம்புகின்றனர்.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.










