மைக்ரோ ரக காரொன்று இன்று அதிகாலை தீப்பிடித்து எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது என பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
கதிர்காமத்தில் இருந்து நேற்றிரவு பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த மைக்ரோ ரக காரொன்றே, பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொளும்புவத்தை 2 ம் கட்டை பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இவ்வாறு தீப்பிடிந்து எரிந்து, நாசமாகியுள்ளது.
குறித்த காரில் இருவர் பயணித்ததாகவும் வாகனப் தீப்பிடித்து எரிந்த வேளையில் இருவரும் பாதுகாப்பாக கீழே இறங்கியுள்ள தாகவும் வாகனத்தில் இருந்த கையடக்க தொலைபேசிகள் மற்றும் அவர்களின் உடமைகள் அனைத்தும் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜ்
