குடு வியாபாரிகளின் பணத்தில் வாழ்பவர்களே யுக்தியை எதிர்க்கின்றனர்…

“ குடு வியாபாரிகளின் பணத்தில் வாழும் சிலரே யுக்திய நடவடிக்கையை எதிர்க்கின்றனர். எனினும், முன்வைத்த காலை நாம் பின்வைக்க தயாரில்லை.” – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தை முன்வைத்தபோதும் சமூகவலைத்தளங்களில் உள்ள சிலர் எம்மை விமர்சித்தனர். யுக்திய நடவடிக்கையையும் விமர்சித்துவருகின்றனர். குடு காரர்களின் பணத்தில் வாழ்பவர்கள்தான் இவ்வாறு செயற்படுகின்றனர். என்னையும், பொலிஸ்மா அதிபரையும் பலகோணங்களில் விமர்சித்துவருகின்றனர், எப்படிதான் விமர்சித்தாலும் நிர்ணயித்த இலக்கை அடையாமல் நாம் பின்வாங்கப்போவதில்லை.

அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியை நிலைநாட்டும் நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம். எம்மிடம் இல்லாத தகவல்கள் கத்தோலிக்க ஆயர் பேரவையிடம், அருட்தந்தையர்களிடம் இருந்தால் எமக்கு வழங்கி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கலாம். பேராயர் உள்ளிட்ட ஆயர்மாரிடம் இந்த கோரிக்கை விடுக்கின்றோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles