காலி அபிவிருத்திக்காக விசேட ஆணைக்குழு

காலியின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்காக விசேட ஆணைக்குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

காலி அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று (27ம் திகதி) கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காலி நகரம் மற்றும் காலி கோட்டை பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

காலி கோட்டையில் அமைந்துள்ள அரச நிறுவனங்களையும் காரியாலயங்களையும் காலி கோட்டைக்கு வெளியே கொண்டு வருவதற்கான செயற்பாடுகள் மந்தகதியில் இடம்பெற்று வருவது தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

காலி நகரத் திட்டத்தை அமுல்படுத்துவதில் நகர அபிவிருத்தி அதிகார சபை, தொல்பொருள் திணைக்களம் மற்றும் ஏனைய அனைத்து நிறுவனங்களும் ஒரே நிறுவனக் கட்டமைப்பின் கீழ் செயற்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இப்பகுதி சுற்றுலாத்துறை ஊக்குவிப்பிற்கான திட்டங்களை துரிதப்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

காலி கோட்டைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.அருகில் உள்ள கடைக்கு சென்று கடை உரிமையாளர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, காலி கோட்டையின் அபிவிருத்தி தொடர்பில் அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles