திங்கட்கிழமை விசேட விடுமுறையா?

சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (05) விசேட விடுமுறையை வழங்குவது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை – என்று உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

சுதந்திர தின ஏற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது சுதந்திர தினம் இம்முறை ஞாயிற்றுக்கிழமை வருவதால், திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்படுமா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” அவ்வாறானகோரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும் இன்னும் தீர்மானம் எட்டப்படவில்லை.” எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles