தமக்கு நியாயமான சம்பள உயர்வை வழங்குமாறு வலியுறுத்தி மஸ்கெலியா, புரவுன்லோ தோட்ட தொழிலாளர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணிவரை மஸ்கெலியா – நோட்டன் பிரதான வீதிக்குவந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
“ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நாட் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். ஆனால் அந்த கொடுப்பனவுகூட இன்னும் வழங்கப்படவில்லை.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் ஆயிரத்து 700 ரூபா போதுமா? எமக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்.” – என்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கோஷம் எழுப்பினர்.










