தனது கணவரின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும், அது தொடர்பில் முழுமையான விசாரணைiயை நடத்துமாறு கோரியும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சாமரி பிரியங்கா பெரேரா.
விபத்து இடம்பெற்ற விதம் பற்றி சந்தேகம் ஏற்படுகின்றது, சாரதியின் நடத்தை குறித்தும் சந்தேகம் நிலவுகின்றது எனவும் அவர் சிஐடியினரிடம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் சனத் நிஷாந்தவும், அவரின் மெய் பாதுகாவலரும் பலியாகினர். சாரதி உயிர் தப்பினார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.