“ஒக்டோபரில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். தேர்தலை எதிர்கொள்வதற்கும் நாம் தயார். எதிரணிகளையும் தயாராகுமாறு கோருகின்றேன்.”
இவ்வாறு அறிவிப்பு விடுத்தார் மூத்த அமைச்சரான நிமல் சிறிபாலடி சில்வா.
“எதிரணிகள் தேர்தல், தேர்தல் என கூக்குரலிடுகின்றனர். சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் உட்பட அரசின் திட்டங்களை குழப்புவதே இதன் நோக்கமாகும். தேர்தலை நடத்தினால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடுமாம், இதுதான் எதிரணிகளின் பொருளாதாரக் கொள்கையா?
ஓக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். அத்தேர்தலை ஒத்திவைக்க முடியாது. தேர்தலுக்கு தயாராகுங்கள். நாமும் தயார். அத்தேர்தலில் முதுகெலும்புள்ள, நாட்டுக்கு சேவை செய்யக்கூடிய, பொருளாதாரம் மற்றும் சர்வதேச அரசியல் தொடர்பில் அனுபவம் உள்ள தலைவர் யார் என்பதை உணர்ந்து மக்கள் அவரை ஆதரிப்பார்கள்.” – என்றும் அவர் கூறினார்.