பஸ்ஸில் சில்மிஷம் – இரு இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் பஸ்ஸில் பெண்களுடன் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் பஸ்ஸில் பொதுமக்களுடன் பொதுமகன்கள் போன்று பிரயாணம் செய்த பொலிஸ் புலனாய்வாளர்களே இருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் அராலிப் பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் என்றும், அவர் களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles