தனது 21 வயது காதலன்மீது 19 வயது காதலி கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ள பயங்கர சம்பவமொன்று கம்பளையில் இடம்பெற்றுள்ளது.
கம்பளை, பொதுசந்தை பகுதியில் உள்ள மீன் கடையொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது, கத்திக்குத்து தாக்குதல் நடத்திய யுவதி கம்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கம்பளை, உலப்பனை பகுதியை சேர்ந்த 19 வயது யுவதியொருவரும், 21 வயது இளைஞன் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் காதல் தொடர்பை இளைஞன் துண்டிக்க முற்பட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. தாம் ஜோடியாக இருக்கும் படத்தை முகநூல் பக்கம் யுவதி பதிவிட்டுள்ளார். இதனால் கடுப்பான இளைஞன், அவரை தாக்கியுள்ளார்.
இதனையடுத்து யுவதியின் சகோதரனும், தாயும் இளைஞன் இருக்கும் இடத்துக்கு வந்து, இது பற்றி விசாரித்துள்ளனர். இதன்போது யுவதியின் சகோதரனை குறித்த இளைஞன் தாக்கியுள்ளார். அவர் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன்பின்னர் மீண்டும் வந்த யுவதி, தான் காதலித்த இளைஞன்மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். படுகாயம் இடைந்த இளைஞன் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.