தயக்கமின்றி தலைமைப்பொறுப்பை ஏற்ற ஜனாதிபதியை பாராட்ட வேண்டும் – ஜீவன்

“ நாடு நெருக்கடியான சூழலை எதிர்கொண்டபோது தயக்கமின்றி நாட்டின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டார். நாட்டை மீண்டும் ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டு செல்வதற்கு இடமளிக்காமல் பொருளாதாரத்தை சரியான பாதையில் இட்டுச் செல்வதற்காக ஜனாதிபதியை பாராட்ட வேண்டும்.”

இவ்வாறு இதொகாவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதற்கட்ட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

Related Articles

Latest Articles