‘குடு சலிந்து’வின் சகாவிடம் பலகோணங்களில் விசாரணை!

போதைப்பொருள் வியாபாரம் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள குழு உறுப்பினரான ‘குடு சலிந்து” வின் பிரதான சகாவான ‘பியுமி ஹஸ்திக’ துபாயில் கைது செய்யப்பட்டு , நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளார். அவரிடம் பலகோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

குற்ற புலனாய்வு பிரிவின் விசேட குழுவினரால் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள அவர் தற்போது சிஐடியின் பாதுகாப்பின்கீழ் உள்ளார்.

குடு சலிந்து அண்மையில் மடகஸ்காரில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் தற்போது சிஐடியில் உள்ளார். எனினும், குடு சலிந்துவின் போதைப்பொருள் வலையமைப்பை டுபாயில் இருந்து பியுமி ஹஸ்திக செயற்படுத்தி வந்துள்ளார்.

இது தொடர்பில் சிஐடியினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கமைய அவரை கைது செய்வதற்கு விசேட குழுவொன்று துபாய் சென்றிருந்தது. சிவப்பு அறிவித்தலின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டு, இன்று அதிகாலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

குடுசலிந்துவின் ஆலோசனையின் பிரகாரம் இவர் இலங்கையில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வெளிநாடு தப்பியோடியுள்ளார்.

அதேவேளை, வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை, சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles