மாணவியை வன்புணர்ந்த ஆட்டோ சாரதிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை – நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு

தனது உறவுக்கார சிறுமியொருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 35 வயது நபருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றத்தால் 10 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரியவால் நேற்று இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவியான சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், ஆட்டோ சாரதியான குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக 2013 இல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அவர் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டதையடுத்தே மேற்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7 லட்சம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறும், நீதிமன்றுக்கு 25 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவைகளை செலுத்தாத பட்சத்தில் மேலும் 06 மாதகால சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்.

வலப்பனை பகுதியை சேர்ந்த சிசுபாலன் புஸ்பராஜ் (35) என்ற ஆட்டோ சாரதிக்கே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஆ. ரமேஷ்

 

Related Articles

Latest Articles