நுவரெலியா மாவட்டத்தில் மாலைவேளையில் மழையுடன் கூடிய வானிலை நிலவிவருகின்றது. அத்துடன், கடும் பனிமூட்டமும் நிலவுகின்றது.
இதனால் பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் அறிவிறுத்தியுள்ளனர்.
வாகனங்களின் முன் விளக்குகளை
ஒளிரச்செய்யுமாறு கோரப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில் நுவரெலியா, கந்தப்பளை, இராகலை, நானு ஓயா, டொப்பாஸ் போன்ற பிரதேசங்களில் பனி மூட்டம் கடந்த இரண்டு தினங்களாக மாலை வேளையில் அதிகரித்து காணப்படுகின்றது. இன்று வெள்ளிக்கிழமை (16) பிற்பகல் மூன்று மணிக்கு பின்னரான காலப்பகுதியில் மழையுடன் பனி மூட்டமும் வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளது.
கந்தப்பளை பகுதியில் அருகில்வரும் வாகனம் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.
நுவரெலியா – கண்டி பிரதான வீதியில்; டொப்பாஸ் தொடக்கம் லபுக்கலை பிரதேசம் வரை கடும் பனி மூட்டம் காணப்பட்டுள்ளது. இதனால் அவ் வீதியில் மிக அவதானத்துடன் வாகனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
-ஆ.ரமேஸ்-
