இன்று(19) அதிகாலை 12:30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்புகளில் மேலும் 1,017 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 903 சந்தேகநபர்களும் குற்றத்தடுப்பு பிரிவினால் பட்டியலிடப்பட்ட 114 சந்தேகநபர்களும் அடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
ஹெரோயின், ஐஸ், கஞ்சா, மாவா மாத்திரைகள் உள்ளிட்ட பல போதைப்பொருட்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகத்தின் பட்டியலில் இருந்த 11 சந்தேகநபர்களும் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்ட 77 சந்தேகநபர்களும் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 5 சந்தேகநபர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.










