மாமனாரை பொல்லால் தாக்கி கொலை செய்த மருமகன்! பேராதனையில் கொடூரம்!!

தனது மாமனாரை மருமகன் பொல்லால் தாக்கி கொலை செய்துள்ள கொடூர சம்பவமொன்று பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிகல, கூருகம தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

51 வயதான மாரிமுத்து தர்மசீலன் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையொருவரெ இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட நபரின் மூத்த மகளை மணம்முடித்த நபரே இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.

தனது மனைவியை பிரிந்து வாழும் அவர், தனது பிள்ளையை பார்க்க வேண்டும் எனக்கூறி நேற்று (19) கூருகம தோட்டத்துக்கு வந்துள்ளார்.

நண்பர்களுடன் இணைந்து மது அருந்தியுள்ளார்.
பின்னர் மாமனாருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது மாமனாரை அவர் பொல்லால் தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரை பாதுகாத்தக்கொள்வதற்காக அங்கிருந்து ஓடியுள்ளார். இந்நிலையில் இன்று (20) காலை தோட்ட பங்களா பகுதியில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

சடலத்தை கண்ட தோட்ட கங்காணி அது தொடர்பில் தோட்ட முகாமையாளருக்கு அறிவித்துள்ளார். பின்னர் தோட்ட நிர்வாகத்தால் பேராதனை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வருகைதந்த பேராதனை பொலிஸார் பரிசோதனைகளை மேற்கொண்டனர். தடயவியல் பொலிஸாரும் வருகை தந்திருந்தனர். கண்டி மாவட்ட பதில் நீதவானும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டார்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பேராதனை பொலிஸார் இறங்கியுள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளையும் முன்னெடுத்துவருகின்றனர்.

 

Related Articles

Latest Articles