ஜீவனின் வளர்ச்சிக்கு அஞ்சியே எதிரணி அரசியல்வாதிகள் ஒப்பாரி வைக்கின்றனர்…- பாரத் பதிலடி

ஒரு இளம் அரசியல் தலைவராக மக்களுக்கான அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்து, மக்களின் கோரிக்கைகளை அமைச்சர் ஜீவன் தொண்டமான் நிறைவேற்றிவருவதால், அரசியலில் தாம் காணாமல்போய்விடுவோம் என்ற பீதியிலேயே அவர்மீது சில எதிரணி மலையக அரசியல்வாதிகள் விமர்சனக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்துள்ளனர். இது காழ்ப்புணர்ச்சி – வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகும் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

வீட்டுரிமையையும், காணி உரிமையையும் வைத்து இதுவரை அரசியல் நடத்திவந்தவர்கள், இவ்விரண்டு உரிமைகளையும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பெற்றுக்கொடுத்துவிட்டால், தாம் அரசியலில் அநாதையாகிவிடுவோம் என்ற அச்சம் அவர்களை ஆட்கொள்ள தொடங்கியுள்ளது. அதனால்தான் புலம்ப ஆரம்பித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்குவதற்கு சட்டப்பூர்வமாக அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது, ஆக 7 பேர்ச்சஸா அல்லது 10 பேர்ச்சஸா என கோமாளி அரசியல்வாதிகள் குழப்பமடைய தேவையில்லை, அதேபோல அவர்களின் ஆட்சிகாலத்தில் வழங்கப்பட்டதுபோல் காட்போல் உரித்து அல்ல, சட்டப்பூர்வமான காணி உரித்து பத்திரமே வழங்கப்படவுள்ளது எனவும் பாரத் அருள்சாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

“ விசேட அமைச்சரவை அனுமதியுடன் 10 பேர்ச்சஸ் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, 10 பேர்ச்சஸ் காணியுடன்தான் எமது மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும். பயனாளிகள் தேர்வும் முறையாகவே இடம்பெறும். இதனை இந்தியாவும், சம்பந்தப்பட்ட நிறுவனமும் மேற்பார்வை செய்யும். இதற்கு நாம் முழு ஆதரவு வழங்குவோம். தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் அல்ல, தோட்டத்தில் பிறந்திருந்தாலேயே வீடுதான். தோட்டத்தில் 5 வருடங்கள் வாழ்ந்திருந்தால் வீட்டை பெறுவதற்கு அவர் தகுதியுடையவராவார்.

கடந்த ஆட்சியின்போதே கட்சி பார்த்து வீடுகள் வழங்கப்பட்டன. இதன்போது புறக்கணிக்கப்பட்ட – பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாம் முன்னுரிமை வழங்கியுள்ளோம். கட்டி முடிக்கப்படும் வீடுகள் காணி உரிமையுடன்தான் கையளிக்கப்படும். கடந்த காலங்களில் போன்று கண்டி உட்பட சில மாவட்டங்களில் வழங்கப்பட்டதுபோல் காட்போட் காணி வழங்கப்படமாட்டாது.

கண்டி, ஹந்தானை பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் இன்றியே வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. எதிரணி மலையக அரசியல்வாதிகள் சொன்னாலும், சொல்லாவிட்டாலும்கூட ஹந்தானை பகுதியில் உள்ள அரச காணியை நாம் மக்களுக்கு பிரித்துகொடுக்கதான் போகின்றோம்.

காணி உரிமையையும், வீட்டுரிமையையும் வைத்து அரசியல் நாடகம் நடத்தி வந்தவர்கள், இவற்றுக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் செயல் வடிவம் கொடுத்துவருவதால் நடுங்கியுள்ளனர். கடந்த அரசின் இரு அமைச்சுகளையும், இராஜாங்க அமைச்சு பதவிகளையும் வைத்து செய்ய முடியாவற்றை தனி ஒருவனாக ஜீவன் செய்து காட்டியுள்ளதால் வன்மத்தை அவர்மீது வெளிப்படுத்த முற்படுகின்றனர்.

காலையில் எதிரணியிலும் இரவில் அரச தரப்புடனும் டீல் அரசியல் நடத்தும் இவர்களை விமர்சிப்பதுகூட எமக்கு இழுக்குதான். இருந்தாலும் சமூகத்தின் போலி கருத்துகளை விதைத்து மக்களை குழப்பக்கூடாது. அதனால்தான் இந்த தெளிவுபடுத்தல்.” – என்றார்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles