மலையக மக்களை இழிவுபடுத்திய அதிகாரியை உடன் பணி நீக்கம் செய்யவும் – சஜித்

“ மலையக பொருந்தோட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுங்கள்.”

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தினார்.

“ இந்நாட்டில் பெருந்தோட்டங்களை அண்டிய ஆண் சமூகம் பிற்பகல் 2 மணியாகும் போது மது அருந்துவதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்ட கருத்தானது ஒட்டுமொத்த பெருந்தோட்ட சமூகத்தையும் அவமதிக்கும் செயலாகும்.

இவ்வாறான கருத்துக்களை வெளியிட்ட மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவரை பணி நீக்கம் செய்து இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles