ரஷ்ய, உக்ரைன் பிரஜைகளுக்கான விசா நீடிப்பு இரத்தா? ஜனாதிபதி விசாரணைக்கு பணிப்பு

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமைச்சரவையின் முன் அனுமதியின்றி வெளியிடப்பட்ட அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட விசா நீடிப்புகளை இரத்து செய்ய இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக முடிவு செய்யவில்லை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles