நாவலப்பிட்டிய பகுதியில் வேன் விபத்து: 13 மாணவர்கள் காயம்!

நாவலப்பிட்டி, கெட்டபுலாவிலிருந்து ஹரங்கல நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று இன்று (05) காலை விபத்துக்குள்ளானதில் 13 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை 7.00 மணியளவில், நாவலப்பிட்டி – திஸ்பனே சந்தி பகுதியில் குறித்த வேன் பயணித்துக்கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 13 மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் வேனின் சாரதியும் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

க.யோகா

Related Articles

Latest Articles