ஆலயப் பணியின் போது உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயது இளைஞர் பரிதாபச் சாவு!

வவுனியா, குறிசுட்டகுளம் – கனகராயன்குளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இக்கோரச் சம்பவத்தில் குறிசுட்டகுளம், கனகராயன்குளத்தைச் சேர்ந்த கணேசன் குகப்பிரியன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இவ்விபத்துத் குறித்து மேலும் தெரியவருவதாவது:-

நேற்று செவ்வாய்க்கிழமை குறிசுட்டகுளம் பகுதியில் அமைந்துள்ள காளி கோயிலில் திருப்பணிகளை மேற்கொள்வதற்காக உழவு இயந்திரத்தை இயக்கிய போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது, எதிர்பாராதவிதமாக உழவு இயந்திரத்தின் இயந்திரப் பகுதிக்குள் தவறி விழுந்ததில், அதில் சிக்குண்டு அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இளைஞரின் இந்தத் திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இளைஞரின் மரணம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன், விபத்துத் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles