கொட்டகலையில் விபத்து: இரு வாகனங்கள் சேதம்!

மலைவாஞ்சான்

நுவரெலியா கொட்டகலை பிரதான வீதியில் பஸ் கெப் நேருக்கு நேர் விபத்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

கொட்டகலை, நுவரெலியா பிரதான வீதியில் தனியார் பஸ்ஸொன்றும், கெப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் 79 வது மைல் கல்லுக்கு அருகில் இன்று 25 மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலையில் இருந்து கொட்டகலை பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்த கெப்ரக வாகனமும், ஹட்டன் பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பஸ்சுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படாத போதிலும் இரண்டு வாகனங்களும் சேதமடைந்துள்ளன.

கெப்ரக வண்டியின் சாரதிக்கு வானத்தினை கட்டுப்படுத்த முடியாமல் போனதன் காரணமாகவே குறித்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்; தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள, பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related Articles

Latest Articles