நாமல் ராஜபக்சவுக்கு செப்.23 வரை விளக்கமறியல் நீடிப்பு

ஏயர்பஸ் (Airbus) விமானக் கொள்முதலின் போது சுமார் 2 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளில் சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டது.

அத்துடன், நாமல் ராஜபக்சஷவின் பிணை விண்ணப்ப கோரிக்கை தொடர்பான தீர்மானம் செப்டம்பர் 23 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச , இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின்(CID) சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் நாமல் ராஜபக்சஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா தலைமையிலான சட்டக் குழுவினர் முன்வைத்த சமர்ப்பணங்களை அடுத்து, கோட்டை நீதவான் பசான் அமரசேன இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles