சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பிரஜையான பொறியியலாளர் சிவராசா அனோஜனின் மரணதண்டனையை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் இரத்துச் செய்திருப்பது முழு நாட்டுக்கும் நிம்மதியளிக்கின்றது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அனோஜனின் மரணதண்டனையை இரத்துச் செய்து நெகிழ்வுப்போக்கை வெளிப்படுத்திய சவூதி அரேபிய அரசுக்கும், அந்த நாட்டின் இளவரசர் முஹம்மது பின் சல்மானுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஆட்சியில் உள்ள அரசு என்ற ரீதியில் இலங்கை அரசு இந்த விடயத்தில் தனது பொறுப்பை மிகச் சரியாக நிறைவேற்றியுள்ளது.










