வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு,ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால்
நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார்.
நிதி மற்றும் பொருளாதார அலுவல்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளராகப் பணியாற்றிய ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு, இலங்கை திட்டமிடல் சேவையின் (SLPS) சிரேஷ்ட அதிகாரியாவார்.
அவர் தேசிய திட்டமிடல், அரச நிதி முகாமைத்துவம், பேரண்டப் பொருளாதார முன்கணிப்பு, அபிவிருத்தி நிதியளிப்பு, நிதிப் பகுப்பாய்வு, வரிக் கொள்கை மற்றும் உயர்கல்வி திட்டமிடல் ஆகிய துறைகளில் நீண்டகால அனுபவமிக்க அதிகாரியாவார்.
அதன்படி, ஜனாதிபதி செயலகத்தின் நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் பிரிவின் பிரதானியாகப் பணியாற்றி, பொருளாதார நிர்வாகம் மற்றும் தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பாக மூலோபாயக் கொள்கை வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்.
