அர்ச்சுனா எம்.பி. கைது!

கைத்துப்பாக்கியைகாட்டி மிரட்டல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். இளவாலைப் பொலிஸாரினால் அவர் இன்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரியவிளான் பகுதியிலுள்ள காணி தொடர்பில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும், மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் பிரச்சினை இருந்து வருகின்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மேற்படி காணிக்குள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியமை தொடர்பிலான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியானது.

நாடாளுமன்ற உறுப்பினர்மீது பெண்ணொருவர் கல்வீசுவது தொடர்பான வீடியோவும் வெளியானது.

கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த இளவாலைப் பொலிஸார், இன்று திங்கட்கிழமை (27) மூலம் அளிக்க அர்ச்சுனா இராமநாதனை அழைத்து, வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர், அவரை கைது செய்துள்ளனர்.

அவரிடமிருந்து கைத்துப்பாக்கியும் மீளபெறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதேவேளை, தன்னை அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இளவாலை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பெண்ணொருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

அவர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்படுத்திய வேளை, எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது .

Related Articles

Latest Articles